ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:11 IST)

அதுவரைக்கும் கவர்ச்சி காட்டுவேன் - அது நடந்துச்சுன்னா நானும் நயன்தாரா தான்!

சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ் பேட்டி இதோ!
 
தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பெங்களூரில் வளர்ந்து மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறைமுகமானார். 
 
அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா, விஸ்வாசம்  ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு விஜய் தொலைக்கதியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளாராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். 
 
அந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி கொடுத்தது. இதனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஒர்க் அவுட் வீடியோ, ஹாட் போட்டோக்கள் என வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது நான் கடவுள் இல்லை என்கிற படத்தில் நடித்துள்ளார். 
 
அதன் ப்ரோமோஷனில் பங்கேற்று பேட்டி கொடுத்த அவர் நிறைய ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறினார். அதற்கு உடனே அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்க நயன்தாரா மாதிரி வர ஆசைப்படுகிறீர்களா? என்றார். அப்படி இல்லை நயன்தாரா மிகவும் திறமை வாய்ந்த நடிகை அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம். இப்போதைக்கு எல்லா ஜானரிலும் படம் நடிப்பேன். நான் வளர்ந்த பிறகு நயன்தாரா போன்று செலக்ட்டிவான கதாபத்திரத்தில் நடிப்பேன் என தெளிவாக கூறினார்.