வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (09:14 IST)

"உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த தடை" - முதல்வர் யோகி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

 
இந்து தமிழ்: "உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த முதல்வர் யோகி தடை"
 
​உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல் '​வாட்சாப்' தகவல்களை பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு அலைபேசிக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ள​தாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
"​அலைபேசிகளை கொண்டு வரும் சில அமைச்சர்கள் ​வாட்சாப் செய்திகளை பார்ப்பதால் கூட்டத்தில் கவனம் இருப்பதில்லை. கூட்டத்தின் நோக்கமும் பாழாகிறது. இதுமட்டுமின்றி கூட்டத்தின் நிகழ்வுகள் ​அவற்றின் மூலம் வெளியே வரும் ஆபத்தும் உள்ளது.
 
எனவே அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் அமைச்சர்கள் தங்கள் ​அலைபேசிகளை வெளியே இதற்கென வைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் பாதுகாப்பாக கொடுத்து வைத்து விட்டு தான் வரவேண்டும். ​அலைபேசியுடன் வருபவர்களுக்கு கூட்டத்தில் அனுமதியில்லை​" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.