திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (21:18 IST)

தொடர்ந்து கொலை செய்யப்படும் அரசியல்வாதிகள் – மர்மம் என்ன?

உத்தர பிரேதேசத்தில் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாஜக கிராம சபை தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளரான அவர் ராகுல் காந்தி அவரது ஊருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது மக்களிடம் செருப்பை கொடுத்து அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இறுதி அஞ்சலியில் அவரது சடலத்தை ஸ்மிருதி இரானியே தூக்கி சென்றது பரபரப்பாக பேசப்பட்டது. இன்னும் அந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்களையே கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்னுமொரு கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஹாஜி ஆசன் மற்றும் அவரது உறவினர் ஒருவரை அவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீஸார் இந்த சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணையில் இது தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று கூறியிருக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் இதுபோன்று தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.