புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (17:51 IST)

ஐந்து ஆண்டுகளாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம்!

ஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை பார்க்காத நிலம் உலகத்திற்கான ஓர் எச்சரிக்கை.
 
ஒரு சமயத்தில் தினமும் 40 ஆயிரம் மக்களின் தாகத்தைத் தீர்த்த அணை வறண்டு, ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
 
கொத்து கொத்தாகக் கால்நடைகள் செத்து மடிகின்றன. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு நாள் முழுவதும் காத்துக் கிடக்கின்றனர் மக்கள். இதுதான் இப்போதைய தென் ஆப்ரிக்க நகரங்களின் நிலை.
 
தென் ஆப்ரிக்காவில் உள்ள க்ராஃப் ரெயினெட் நகரத்திலிருந்து செய்தி தரும் பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ அங்கு மழை பெய்து ஐந்து வருடமாகிறது என்கிறார். அணைகள் எல்லாம் வற்றிய பிறகு சில ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே அம்மக்களின் தாகத்தைத் தணிக்கின்றன.
 
ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லை. உண்மையில் இது மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்கின்றனர் சூழலியலாளர்கள்.
 
அதாவது தென் ஆப்ரிக்காவின் குறிப்பிட்ட இந்த பகுதி சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வெப்பமடைவதாகக் கூறுகிறார்கள். புவி வெப்பமயமாதலை மற்ற நாடுகள் தடுக்கவில்லை என்றால் இந்த நிலை பிற இடங்களிலும் ஏற்படலாமென எச்சரிக்கிறார்கள்.