ஐரோப்பிய நாடுகள் குடியேறிகளை நடத்தும் விதத்தை போப் கண்டித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கலான தன்னலம் மற்றும் தேசியவாதம்'' நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவு குறித்து பேசியபோது போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தீவு ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான தஞ்சம் கோரிகளுக்கு நுழைவிடமாக உள்ளது.
கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நடுவே உள்ள கால்வாய் ஒன்றில் தஞ்சம் கோரிகள் வந்த படகு ஒன்று மூழ்கியதில் 27 பேர் உயிரிழந்தனர்.