காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிட்டேன்; மன்னிச்சுடுங்க! – மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்!
க்ரீஸ் நாட்டில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்த தவறியதற்காக மக்களிடம் அந்நாட்டு பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக க்ரீஸ் மற்றும் அதன் தீவுக் கூட்டங்களில் பரவியுள்ள காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் 45 டிகிரி அளவுக்கு வெப்பம் ஏற்பட்ட நிலையில் மக்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன, பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் காட்டுத்தீ குறித்து பேசியுள்ள அந்நாட்டு பிரதமர் கைரியாகாஸ் மிட்சோடகிஸ் “நாட்டு மக்களின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உரிய நேரத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் எங்களால் முயன்றதை செய்தும் அது போதவில்லை. காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய 500 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.