வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (18:11 IST)

இந்தோனீசியா: திருமணத்திற்கு முன்பு உடலுறவுக்குத் தடை, கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம்

இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனீசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர்.


 
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
 
சர்ச்சைக்குரிய மசோதா
 
திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் ஓராண்டு சிறைத் தண்டனை.
 
திருமணத்திற்கு வெளியே இன்னொரு நபருடன் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்ந்தால் ஆறு மாத சிறைத் தண்டனை
 
நாட்டின் அதிபரை, துணை அதிபரை, மதத்தை, அரசு நிறுவனங்களை, தேசியக் கொடியை அவமானப்படுத்தும் விதமாகச் செயல்படுவது சட்ட விரோதம்
பாலியல் வல்லுறவு அல்லது உடல்நல கோளாறு ஆகிய காரணங்கள் இல்லாமல் கருவைக் கலைத்தால் நான்கு ஆண்டு வரை சிறை.
 
- இந்த மசோதாக்களைச் சட்டமாக்க இந்தோனீசியா நாடாளுமன்றம் முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடப்பதாக இருந்தது.
 
இதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
 
இதனை அடுத்து வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
 
மக்கள் என்ன சொல்கிறார்கள்?
 
புதிய சட்டம் ஒன்றின் மூலம் ஊழல் ஒழிப்பு ஆணையத்தையும் அரசு பலவீனப்படுத்த முயல்வதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், "என் கவட்டை அரசுக்குச் சொந்தமானது இல்லை" என்று எழுதி இருந்த பதாகையை ஏந்தி இருந்தார்.
 
போராட்டக்காரர்களைத் தடுக்க ஜகார்த்தாவில் 5000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.