புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (20:17 IST)

சீனாவில் உலகின் அரிதான வகை ஆமை இறந்தது

உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது.
இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது.
 
இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை இனத்தை பெருக்க ஐந்து முறை முயற்சி செய்தனர். ஆனால், பலனளிக்கவில்லை.
 
வேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல் மற்றும் வரன்முறையற்று மீன் பிடித்தல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த ஆமையினம் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது.
 
இன்னும் ஓர் ஆண் ஆமை மட்டும் சீன வனவிலங்கு பூங்காவிலும், மீதம் உள்ள இரு ஆமைகள் வியட்நாம் காடுகளிலும் உள்ளன.
 
செயற்கையாக விந்தணுவை செலுத்தியதுதான் இந்த வகை ஆமையினம் பலி ஆனதற்கு காரணமா என்ற கேள்விக்கு, வன விலங்கு பூங்கா ஊழியர்கள், " விந்தணு செலுத்தப்பட்ட பின்பும் அது ஆரோக்கியமாகதான் இருந்தது. ஆனால், அடுத்த நாள் உடல்நலக் குறைவால் இறந்துள்ளது" என்றார்.
 
அந்த ஆமை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.