வைர முகக் கவசங்கள்: கொரோனாவுக்கு நடுவே குஜராத்தில் கேளிக்கை

Papiksha Joseph| Last Modified வியாழன், 16 ஜூலை 2020 (12:49 IST)

உலகமெங்கும், கொரோனாவை சமாளிக்க மருத்துவமனை கட்டுகிறார்கள், வென்டிலேட்டர்கள் தயாரிக்கிறார்கள்.

பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முகக் கவசங்களை சமூகங்களுக்கு பெருமளவில் கொடையாக அளிக்கின்றன. ஆனால், குஜராத்தில் சில பணக்காரர்களுக்கு நோய்த் தடுக்க அணியும் மாஸ்க் கூட டாம்பீகத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பம்தான் போலும். முன்னர் தங்கத்தில் செய்த மாஸ்குகள் செய்திகளில் அடிபட்டன. இப்போது வைர மாஸ்க். சூரத் நகரில் உள்ள நகைக்கடைக்காரர் ஒருவர், வைரம் பதிந்த மாஸ்க்குகளை தயாரிக்கிறார். கைத்தறி, டிசைனர் மாஸ்க்குகள் எனப் பல வித மாஸ்க்குகள் பட்டியலில் வைர மாஸ்க்குகளும் சேர்ந்துள்ளன.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.இதில் மேலும் படிக்கவும் :