தொலைக்காட்சி சீரியல்களின் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பு எப்போது – அதிரடியாக அறிவித்த கலர்ஸ் தமிழ்!

Last Modified வியாழன், 16 ஜூலை 2020 (12:41 IST)

கொரோனா காரணமாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்புவதில் சிக்கல் உருவானது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ஜூன் மாதம் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகமாக தற்காலிகமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதனால் இப்போது வரை பழைய சீரியல்களே ஒளிபரப்பப் பட்டு வருகின்றன.

இதையடுத்து தற்போது மீண்டும் சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் தொடர்களின் புதிய எபிசோட்கள் எப்போது ஒளிபரப்பப்படும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்தது. இதையடுத்து தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான கலர்ஸ் தமிழ் வரும் 20 ஆம் தேதி தங்கள் சீரியல்கள் ஒளிபரப்பப் படும் என அறிவித்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :