செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (19:01 IST)

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

PM Modi
ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்து அடுத்த கட்ட தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆவேசமாக பேசினார் 
 
நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் உழைத்து வருகிறது என்றும் சமூக நீதியை கொன்றது காங்கிரஸ் கட்சி தான் என்றும் பிற்படுத்தப்பட்ட உறுப்பினரின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ் என்றும் அவர் பேசினார் 
 
மேலும் ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால் அவற்றில் ஒரு வீட்டை பிடுங்கி வேறு பிரிவினருக்கும் காங்கிரஸ் வழங்கிவிடும் என்றும் உங்களிடம் இரண்டு வண்டி இருந்தால் அவற்றை ஒன்றை தங்களது வாக்கு வங்கிக்காக பிடுங்கிவிடும் என்றும் பிரதமர் மோடி பேசி உள்ளார். 
 
Edited by Mahendran