கொரோனா சிகிச்சையில் குணமான அடுத்த நாளே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் – விதிகளை பின்பற்றாததால் சர்ச்சை!

Last Updated: வியாழன், 16 ஜூலை 2020 (12:46 IST)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமான அமைச்சர் கே பி அன்பழகன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கொரொனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களுக்கு மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமாகி நேற்று வீடு திரும்பினார். இது போல சிகிச்சையில் குணமானவர்கள் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால் அமைச்சர் கே பி அன்பழகன் நேற்று மாலையே சென்னை பிர்லா கோலரங்கத்தில் நடந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இது இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அமைச்சர் விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :