1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (21:30 IST)

தலாய் லாமாவின் சர்ச்சை பேச்சு: "எனது இடத்தை நிரப்பும் பெண் அழகாக இருக்க வேண்டும்"

பூமி பந்தில் இவர் மிகவும் அறியப்படுபவர் என்பதில் சந்தேகமில்லை.
 
பிரபலமானவர்கள் வணங்கப்பட்ட காலத்தில், இறைநம்பிக்கையின் தலைவராக இருந்த தலாய் லாமா, ஆன்மிக நட்சத்திரமாக விளங்குகிறார்.
 
84ஆவது பிறந்த நாளை நெருங்கி வரும் தலாய் லாமா, ஊக்கமூட்டும் மேற்கோள்களை வழங்கியுள்ளார். சில வேளைகளில் அதிர்ச்சி அளிக்கும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.
 
சீனா
 
"ஒரு முறை என்னை சாத்தான் என்று சீன அதிகாரி ஒருவர் அழைத்தார்" என்று சிரித்து கொண்டே கூறிய தலாய் லாமா, தனது தலை மீது விரல்களை கொம்புபோல் வைத்து கொண்டு, "அதனை கேட்டபோது, 'ஆம், நானொரு கொம்புகளுள்ள சாத்தன்' என்று பதிலளித்தேன்" என்றார்.
 
"அவர்களின் அறியாமையை நினைத்து கவலைப்படுகிறேன். அவர்களின் அரசியல் சிந்தனை மிகவும் குறுகியது" என்று தலாய் லாமா மேலும் கூறினார்.
 
இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்த தலாய் லாமா, சுமார் பத்தாயிரம் திபெத்தியர்களோடு 60 ஆண்டுகளாக தர்மசாலாவில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார்.
 
இமயமலையில் தௌலாதார் மலைத்தொடரில் பனி படர்ந்த மலை சிகரங்களின் எதிரில் அமைந்துள்ள இவரது மடாலயம் மிகவும் அழகாக உள்ளது. ஆனால், அதில் அவர் வாழாதது துக்கம் நிறைந்த கதையாகும்.
 
தன்னை சந்திப்பதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்னும் முயற்சிக்கவில்லை என்று தலாய் லாமா தெரிவிக்கிறார். கடந்த ஆண்டுகளில், ஓய்வுபெற்ற சில சீன அதிகாரிகளோடு கலந்துரையாடியதாக தெரிவித்த தலாய் லாமா, எந்த முயற்சியும் சீன அதிபரோடு சந்திப்புக்கு இட்டுசெல்லவில்லை என்று தெரிவித்தார்.
 
அமெரிக்க அதிபர்கள்
அமெரிக்க அதிபர்கள் தலாய் லாமாவை சந்திக்க வரிசையில் காத்திருக்க, உலக நாடுகளின் தலைநகரங்களில் அதிக கவனம் பெற்ற தலைவராக அவர் வலம் வந்தார்.
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், நாடாளுமன்ற மரியாதை வழங்கும் தங்கப்பதக்கம் வழங்கினார். அதேபோன்று, அமெரிக்க அதிபராக இருந்தபோதும், 2017ம் ஆண்டு அபதவியில் இல்லாதபோதும் என பல முறை பாராக் ஒபாமா தலாய் லாமாவை சந்தித்துள்ளார்.
 
ஆனால், தற்போது வெள்ளை மாளிகையிலுள்ள அதிபர் டொனால்டு டிரம்போடு தலாய் லாமா கொண்டுள்ள உறவு மிகவும் வேறுபட்டதாகும்.
 
"அமெரிக்காவின் 45வது அதிபரின் காலம் அறநெறி கொள்கைகள் குறைந்ததாக வரையறுக்கப்படும்" என்று விமர்சித்தார்.
 
இந்த கருத்து, 2016ம் ஆண்டு "டிரம்ப் அதிபராக ஆகியிருப்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று அவர் கூறியதற்கு முரணானதாகும்.
 
அகதிகள்
அகதிகள் பற்றி தலாய் லாமா கருத்து தெரிவிக்கையில், "ஐரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும். வேலை செய்கின்ற குறிப்பிட்ட திறன்களோடு அவர்களை தாயகங்களுக்கு திருப்பி அனுப்புவதை நோக்கமாக கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
மக்கள் விட்டு சென்றுள்ள நாடுகளை மீள்கட்டமைப்பதே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என்று தலாய் லாமா நம்புகிறார்.
 
2008ம் ஆண்டு டேவிட் கேமருன் தலாய் லாமாவை சந்தித்தார்,
ஆனால், உலக அளவில் 70 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தாங்கள் குடிபெயர்ந்துள்ள நாடுகளிலேயே, தங்கியிருக்க வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால் என்ன செய்வது?
 
"ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வரை பரவாயில்லை. ஆனால், ஐரோப்பா முழுவதும் படிப்டியாக இஸ்லாமிய,, ஆப்பிரிக்க நாகளாக மாறிவிடும் என்பது நடைபெறாத செயல்" என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
 
பெண் தலாய் லாமா
இன்னொரு ஆச்சரியமான கருத்தாக, "புத்தசாலித்தனம் முக்கியமாக இருப்பதைபோல, பெண் தலாய் லாமாவுக்கு நல்ல அழகும் தேவை" என்று கூறி, தற்போதைய தலாய் லாமா கருத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
 
 
சிரித்தவாறே பதிலளித்த தலாய் லாமா, "பெண் தலாய் லாமா வருவதாக வந்தால், அதிக அழகோடு இருக்க வேண்டும்" என்ற கூறினார்.
 
இந்த கருத்து, சகிப்புத்தன்மை மற்றும் தன்னம்பிக்கையை போதிக்கும் தலாய் லாமாவின் கருத்துகளுக்கு முரணானதாக தோன்றுகிறது.
 
இமயமலையில் தௌலாதார் மலைத்தொடரில் பனி படர்ந்த மலை சிகரங்களின் எதிரில் அமைந்துள்ள தலாய் லாமாவின் மடாலயம் மிகவும் அழகாக உள்ளது.
ஆனால், பௌத்த இலக்கியத்தில் உள் மற்றும் வெளி அழகு மிகவும் முக்கியமானது என்று தலாய் லாமா தெளிவாக்கியுள்ளார்.
 
சமத்துவம் முக்கியமானது என்று தெரிவித்த தலாய் லாமா, பெண்களின் உரிமைகளை வழங்குவதையும், பணியிடங்களில் பாகுபாடற்ற ஊதியம் வழங்குவதையும் தான் ஆதரிப்பதற்கு அழுத்தம் கொடுக்க எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
 
திபெத்திற்கு திரும்பி செல்ல முடியாததில் ஒரு நன்மை என்னவென்றால், இந்தியா சுதந்திரமான நாடாக இருப்பதால், தன்னால் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்க முடிகிறது என்று தலாய் லாமா கூறியுள்ளார்.