புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (21:03 IST)

கடலில் இறங்கிய பெண் – காத்திருந்த ஆழ்கடல் அரக்கன்: நடந்தது என்ன?

கரீபியன் தீவுகளும் அதன் கடற்கரைகளும் சுற்றுலாவுக்கு மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் அதேசமயம் சில கடற்கரை பகுதிகள் நமது கற்பனைகளை மிஞ்சிய ஆபத்தை கொண்டிருப்பவை. இந்த சம்பவமும் அப்படியான ஆபத்துக்கு ஒரு சின்ன உதாரணம்தான்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ஜோர்டன் லிண்ட்சே. 21 வயதான இந்த பெண் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். லிண்ட்சேவுக்கு சுற்றுலா செல்வதில் விருப்பம் அதிகம். அதனால் அவள் பெற்றோர் அவளை விருப்பப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை ஜோர்டன் சுற்றுலாவுக்கு தவறான ஒரு பகுதியை தேர்வு செய்துவிட்டாள். அவள் தேர்வு செய்தது கரீபியன் கடற்கரை பகுதியை!

மகளின் ஆசையை நிறைவேற்ற பெற்றோர் அவளை அங்கு அழைத்து சென்றுள்ளனர். அழகான பரந்து விரிந்த கடலை பார்த்த ஜோர்டன் அதில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டிருக்கிறாள். அவளது பெற்றோர் அதிக ஆழம் செல்ல வேண்டாமென எச்சரித்து அவளை அனுப்பியிருக்கிறார்கள்.

கடலில் இறங்கியவள் கண்ணாடி போன்று தெளிந்த தண்ணீரில் அடியில் நீந்தி செல்லும் மீன்களை பார்த்தவாறே நீந்தி சிறிது தொலைவுதான் சென்றிருப்பாள். அதே தண்ணீருக்கடியில் காத்திருந்த ஆபத்தை கவனிக்க அவள் தவறிவிட்டாள். தூரத்திலிருந்து ஒரு ராட்சத சுறாமீன் அவளை நோக்கி வருவதை அப்போதுதான் அவள் கவனித்தாள். உடனே கரையை நோக்கி நீந்தலாம் என திரும்பியவளுக்கு அதிர்ச்சி!

ஏற்கனவே அவள் கரைக்கு செல்ல முடியாதபடி இரண்டு சுறா மீன்கள் வழியை மறைத்து முன்னால் வந்து கொண்டிருந்தன. என்ன செயவ்தென்று புரியாமல் பயத்தில் அப்படியே உறைந்து போனாள் ஜோர்டன். அவளை சுறா மீன்கள் சுற்றி வளைத்து விட்டதை கரையிலிருந்து பார்த்த அவளது பெற்றோர் உடனே அலறியபடி உதவிகேட்டு காவலர்களை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் அவை வந்த வேலையை முடித்து விட்டிருந்தன.

தப்பிக்க முயன்ற ஜோர்டனின் கால், கைகளை குதறிவிட்டன, கை, கால் எலும்புகள் முறிந்து இதற்குமேல் தன்னால் தப்பிக்க முடியாது என உயிர் போகும் நிலையில் துடித்து கொண்டிருந்தார் ஜோர்டன்.

அந்த சமயம் படகில் வந்த காவலர்கள் சுறாக்களை விரட்டியடித்து ஜோர்டனை மீட்டனர். உடலில் பல பாகங்களும் கடித்து குதறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோர்டன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

ஆசை மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர் கடைசியாக அந்த மகளையே சுறா மீன்களுக்கு இரையாக பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதி சுற்றுலாவாசிகளை கண்கலங்க செய்துவிட்டது. மேலும் அந்த பகுதியில் சுறாக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் நீந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.