மோடி கித்னா அச்சா ஹை! மோடியுடன் செல்பி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்
மோடி அலை இந்தியாவிலிருந்து புறப்பட்டு உலகமெங்கும் வீசுகிறது போலும். அந்த அளவிற்கு நாடு நாடாக சென்று எல்லா பிரதமர்களையும் சிநேகிதம் பிடித்து வைத்திருக்கிறார் மோடி. தற்போது நடைபெற்று வரு ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார் மோடி.
முதல் நாளான நேற்று ஜப்பான் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்திய மோடி இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதற்கான திட்டத்தை உறுதி செய்தார். இன்று சீன அதிபரும், ட்ரம்பும் சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மோடியோடு செல்பி எடுத்து அதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “எவ்வளவு நல்லா இருக்கு” என்று பொருள்படும் ஹிந்தி வார்த்தையான “கித்னா அச்சா ஹை” என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.