வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (21:25 IST)

கல்லூரிப் படிப்பு: தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் போலீஸில் புகார்

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வற்புறுத்திய தந்தை மீது மகள் போலீஸில் புகார்.
 
தனக்கு விருப்பமில்லாத படிப்பை படிக்க வைக்க மறுத்து, தனது மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்து வைத்துக் கொண்டதாக தந்தை மீது மகள் புகார் அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக 12ஆம் வகுப்பு படித்து முடித்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த மாணவி போலீஸ் புகார் எண்ணுக்கு வாட்சப்பில் புகார் அனுப்பியுள்ளார்.
 
தனக்கு இதழியியல் படிக்கவே விருப்பம், ஆனால் தன்னை பிஎஸ்.சி, இயற்பியல் அல்லது வேதியியல் படிக்க தனது தந்தை வற்புறுத்துவதாக அப்பெண் கூறுகிறார்.
 
"நான் என் தந்தைக்கு விருப்பமாக படிப்பை தேர்வு செய்ய மறுத்துவிட்டதால், என் சான்றிதழ்களை தர மறுக்கிறார்," என அந்த மாணவி தெரிவித்தார்.
 
பின்னர் அந்த மாணவியின் தந்தை சான்றிதழ்களை தர ஒப்புக் கொண்டதாக அவருக்கு காவல்நிலையத்தில் இருந்து அழைப்பு வந்ததாக அந்நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.