திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (14:51 IST)

ஆட்டுக்குட்டிகளுடன் அசின் மகள்! வைரலாகும் கியூட் புகைப்படம்!

நடிகை அசின் மகள் கார் ஓட்டும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.


 
கடந்த 2001 ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமிழ் சினிமாவுக்கு 2004 ஆண்டு ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
 
அதைத்தொடர்ந்து  'உள்ளம் கேட்குமே', 'சிவகாசி, கஜினி,  போக்கிரி,  தசாவதாரம் , காவலன் போன்ற மெகா ஹிட் வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்திற்கு சென்றார். அடுத்தடுத்து கமல், அஜித், விஜய், சூர்யா , விக்ரம் என வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார். 
 
பிறகு இந்தி சினிமாவில் நடிக்க துவங்கிய அவர் பாலிவுட் சென்ற கையோடு திருமணம் செய்து கொண்டு ஆரின் என்ற பெண் குழந்தைக்கு தாயானார்.



சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஆரினுக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது.  அண்மையில் கூட ஆரின், பைக் மேல் நிற்பது , கார் ஓட்டுவது  என மிகவும் ஸ்டைலிஷான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 
 



இந்நிலையில் தற்போது ஆரின் ஆட்டுக்குட்டிகளுடன் விளையாகும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.