புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (20:53 IST)

ரிஷப் பன்டுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் தோனி மகள் : வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் திறமையையும், அவருக்கு உள்ள ரசிகர்களின் பட்டாளத்தையும் பற்றிச் சொல்லத்  தேவையில்லை. கேப்டன் கூல் என்று அவர் செல்லும் இடம் எங்கும் மக்கள் கூச்சல் போட்டு தம் ஆதரவை தெரிவிப்பர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபி எல் தொடரிலும் சென்னை அணி பைனலுக்கு நுழைந்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் தோனியின் மகள் ஸிவாவை எல்லா ஊடகங்களும் கொண்டாடி வருகிண்றன. அதுவும் தோனியின் மகள் செய்யும் செயல்கள் வைரலாகி வருகின்றன.
 
தற்போது டெல்லி அணி வீரர் ரிஷப் பன்டுக்கு ஸிவா இந்தி கற்றுக்கொடுக்கும் விடியோ வைரலாகிவருகிறது.அதில் பன்டுக்கு இந்தி கற்றுக்கொடுக்கிறார். அப்போது சில எழுத்துக்களை விட்டுவிட்டதாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்த எழுத்துக்களை கற்றுத்தருகிறார். இதற்கு பன்டு நன்றி சொல்கிறார். இவர்கள் இருவரும் உரையாடும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back to Basics !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on