வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (15:04 IST)

பிளாஸ்டிக் பொம்மை விழுங்கி மரணமடைந்த பிரபல நடிகரின் மகள்!

தொலைக்காட்சி நடிகர் பிரதிஷ் வோராவின் 2 வயது மகள் பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பிரதிஷ் வோராவின் 2 வயதில் மகள் ஒரு பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்துவிட்டது. இதனால் பிரதிஷ் வோரா குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். மேலும்  தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் பிரதிஷ். 
 
இறந்த குழந்தையின் உடல் மும்பையில் இருந்து விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. குழந்தையை இழந்து வாடும் நடிகர் பிரதிஷ் குடும்பத்தினருக்கு அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.