புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2019 (18:21 IST)

வரிவிதிப்பில் விலக்கு - அமெரிக்காவுடன் இணக்கம் காட்டுகிறதா சீனா?

அமெரிக்காவுடன் இணக்கம் காட்டும் வகையில் சீனா வரிவிலக்கில் இருந்து 16 அமெரிக்க இறக்குமதி பொருட்களை விடுவித்துள்ளது.
 
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தக போருக்கு மத்தியில், வரிவிலக்கில் இருந்து விடுவித்து 16 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் பட்டியலை சீனா வெளியிட்டது.
 
புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் விலங்குகள் தீவனம் ஆகியவை இதில் உள்ளடங்கும். 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் வரிவிதிப்பு பட்டியலில் உள்ள நிலையில், இன்னமும் பல பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மிகவும் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.
 
சீனாவின் இந்த வரிவிலக்கு முடிவை வரவேற்ற செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் இந்த முடிவு வரவிருக்கும் பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு முன் மிகவும் உகந்த சூழலை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் வேகம் குறைந்து 6.2 ஆனது அங்கு கவலையை ஏற்படுத்தின.