திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (20:19 IST)

’சாம்பார் மசாலா’வில் வயிற்றிப் போக்கு ஏற்படுத்தும் பாக்டீரியா .. அதிர்ச்சி தகவல்

ஐக்கிய அமீரகத்தில் சார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு R - Pure Agro Specialities என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் MDH என்ற பெயரில், உணவு மசாலாவை தயாரித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.  இந்நிலையில் இதன் மசாலா தயாரிப்புகளில்  வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா இருப்பதாக அமெரிக்க நாட்டிலுள்ள உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும்துறை கண்டுபிடுத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
கடந்த வாரத்தில், ஐக்கிய அமீரகத்தில் இருந்து ,R - Pure Agro Specialities என்ற நிறுவனம் தயாரித்த, MDH என்ற சாம்பார் மசாலை அமெரிக்காவில் உள்ள கரோலினா மாநிலத்திற்கு,  அனுப்பிவைத்தனர்.
 
இதைப் பரிசோதித்த அமெரிக்காவிலுள்ள, உனவு மற்றும் மருந்துகள் முறைப்படுத்தும் துறை, இதில்  உணவை விஷமாக மாற்றும்  சல்மோனல்லா என்ற நச்சுத்தன்னை கொண்ட பாக்டீரியா இருப்பது கண்டுபிடித்தனர்.  ஏற்கனவே, இந்த மசாக்களில் இந்த விசத்தன்மை கொண்ட பாக்டீரியாக்கள் இருப்பதற்காக, அமெரிக்கா, அந்த தயாரிப்புகளை துபாய்க்கே திருப்பி அனுப்பினர்.
 
இந்த நிலையில் மறுபடியும் இந்த தயாரிப்புகளை R - Pure Agro Specialities என்ற நிறுவனம்  அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளது. மேலும், அமெரிக்கா மட்டுமல்லாமல், இந்தியா உள்பட சில நாடுகளுக்கும் இந்த மசாக்களை அந்த நிறுவம் ஏற்றுமதி செய்கிறதா என்பது குறித்த தெளிவான விளக்கமில்லை.