செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (17:39 IST)

60 கிமீ வேகத்தில் சென்ற காரில் அசந்து தூங்கிய டிரைவர்..வைரல் வீடியோ

அமெரிக்காவில் 60 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரில் உள்ள டிரைவர் அசந்து தூங்கியுள்ளார்.

அமெரிக்காவில் டெஸ்லா காரில் இருவர் பயணம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 60 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த காரில், பயணம் செயதவருடன் டிரைவரும் சேர்ந்து தூங்கியுள்ளனர். இதனை பார்த்த ஒருவர் தனது காரில் இருந்து ஹாரனை அடித்து அவர்களை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் எழுந்திருக்கவில்லை.

அதன் பின்பு அவர், டிரைவர் தூங்கியபடி சென்றுகொண்டிருந்த காரை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியீட்டுள்ளார். இறுதியில் பயணியும் டிரைவரும் தூங்கிய கார் டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார் என்று தெரியவந்தது. அதாவது அந்த கார் தானாக இயங்கக்கூடிய கார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இது குறித்து டெஸ்லா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ”டெஸ்லா கார் தானாக இயங்கக்கூடிய கார் என்றாலும், டிரைவர்கள் முழு கவனத்துடன் இருக்கவேண்டும். தானியங்கி என நினைத்து டிரைவர் அசந்து தூங்கும் அளவுக்கு நமது காரை பாதுகாப்பாக நினைக்கக்கூடாது” என கூறியுள்ளது.