சைடு வாங்கிய தவடா: சிரித்து சின்னாபின்னமான இளம் பெண்!

Sugapriya Prakash| Last Updated: வியாழன், 12 செப்டம்பர் 2019 (17:52 IST)
சீனாவில் இளம் பெண் ஒருவர் ஓவராய் சிரித்ததால் தாடை ஒரு பக்கமாக நின்றுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள கவாங்ஸோவ் தெற்கு ரயில் நிலையத்திற்கு செல்லும் ரயில் ஒன்றில் இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் பயணித்துள்ளார். ரயிலில் மற்ற பயணிகள் இருப்பார்கள் என்ற சிந்தனை கூட எல்லாம் அந்த பெண்கள் சிரித்து சிரித்து பேசி வந்துள்ளனர். 
 
குறிப்பாக ஒரு பெண் சத்தமாகபும் ஓவராகவும் சிரித்து பேசி இருந்துள்ளார். அப்படி சிரித்துக்கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணின் தாடை ஒரு பக்கமாக திரும்பி நின்றுவிட்டது. கடும் வலியால் துடித்த அவரால் கத்த கூட முடியவில்லை ஆனால் கண்களில் நீர் மட்டும் வடிந்த வண்ணம் இருந்துள்ளது. 
நல்லவேளையாக அந்த ரயிலில் பயணித்த மருத்துவர் ஒருவர் அப்பெண்ணுக்கு முதலுதவி செய்து தாடையை ஒழுங்கு படுத்தியுள்ளார். இந்த சமபவத்தால் அந்த ரயிலில் சிறிது நேரம் பதற்றம் தொற்றிக்கொண்டது. 


இதில் மேலும் படிக்கவும் :