புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (15:00 IST)

சீனாவின் ஏவுகணை சோதனை: அமெரிக்காவின் உயர் ஜெனரல் வேதனை!

சீனா ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது என்பது ஸ்புட்னிக் தருணத்தை நினைவுப்படுத்துவதாக தெரிகிறது என்று அமெரிக்க உயர் ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 
இதுதான் பனிப்போரின் ஆயுத போட்டிக்கான காரணமாகவும் அமைந்தது. ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசிய ஜெனரல் மார்க் மிலி, சீனாவின் ராணுவம் வேகமாக விரிவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 
இம்மாத தொடக்கத்தில் சீனாவின் ஏவுகணை சோதனை அமெரிக்க ராணுவத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது. ஆனால் தாங்கள் எந்த ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை, அது விண்கலப் பரிசோதனை என்றே சீனா தெரிவித்துள்ளது.
 
“இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை கவலையளிக்கும் ஒன்று. இது ஸ்புட்நிக் தருணத்தை போன்று உள்ளது. நாங்கள் இதை கவனித்து வருகிறோம்.” என மார்க் மிலி தெரிவித்துள்ளார்.