சீனாவை உலுக்கும் கொரோனா; லான்சூவ் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு!
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் லான்சூவ் நகரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. உலக நாடுகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசி உள்ளிட்டவை செலுத்தப்பட்டு தற்போது பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சீனாவில் முக்கிய நகரங்களில் விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்சூவ் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால் உடனடியாக அப்பகுதியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.