புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (23:56 IST)

20 ஆயிரம் கன்டெய்னர்களுடன் கப்பல் வாணிபத்தை கேள்விக்குறியாக்கிய சரக்கு கப்பல்

எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலை, மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற நிபுணர்கள் மற்றும் அதை கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய மீட்புக் குழுவினர், அதை பாதுகாப்பான இடத்துக்கு இழுவை படகுகள் மூலம் கொண்டு சென்றனர்.
 
400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொண்ட அந்த கப்பல், மீட்புக்குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கால்வாயின் மையப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணைம் தெரிவித்துள்ளது.