திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (21:43 IST)

’’வக்கீல் சாப்’’ பட டிரைலர் ரிலீஸ் … புதிய சாதனை

பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் வெளியானதை அடுத்து இப்போது தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் குறைந்த நேரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

 
சமீபத்திய ஆண்டுகளில் வெளியான பெண்ணிய திரைப்படங்களில் மிக முக்கியமானது பிங்க் திரைப்படம். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் அதிக அளவில் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இப்படம் நிச்சயம் இப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜூட இணைந்து தயாரித்துள்ளார்.

தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில், தற்போது வக்கீல் சாப் படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.


7 நிமிடத்தில் 100k லைக்குகளைப் பெற்ற இந்த டிரைலர் தற்போது 6 லட்சத்திற்கும் அதிகான லைக்குகள் பெற்று 1 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிச் சென்றுள்ளது. இதனால் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.