செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (22:21 IST)

பிரபல நடிகர் மரணம்….நடிகை அனுஷ்கா உருக்கமான பதிவு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா ,பிரபல நடிகர் மறைவை அடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒர் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் பாகுபலி, வேட்டைக்காரன், சிங்கம், ரெண்டு உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெற்றி பெற்ற படம் வேதம். இப்படம்தான் வானம் என்ற பெயரில்தமிழில் சிம்பு, பரத், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டு மொழிகளிலும் அனுஷ்கா ஒரே கதாப்பாட்திரத்தில் நடித்திருந்தார். வேதம் படத்தில் ராகு என்ற கதாப்பாத்திரல் நடித்தவர் நாகையா. இவர் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. பின்னர் அனிஷாவின் பாகமதி படத்திலும் அவர் நடித்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அனுஷ்கா தனது டுவிட்டர் பக்கத்தில், நல்ல ஆத்மா நம்மைவிட்டுச் சென்றுள்ளது. அவர் நிச்சயம் சொர்க்கத்திற்குத்தான் செல்வார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.