1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (12:14 IST)

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள், எலிகள் எகிப்தில் கண்டெடுப்பு

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் எகிப்திலுள்ள சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் கிடைத்துள்ளது.
இரண்டு மனித மம்மிகளின் உடலை சுற்றி எலிகள் உள்பட மற்ற விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன. இவை புதைக்கப்பட்டுள்ள அறையிலுள்ள சுவர் முழுவதும் இறுதிச் சடங்குகள் குறித்த ஓவியங்கள் உள்ளன.
 
சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான கல்லறையான இது, முற்காலத்தில் எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக விளங்கியதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலைவன பகுதியான இது, இனி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாட்டின் மற்றொரு பகுதியாக உருவெடுக்கும் என்று அந்நாட்டின் தொல்லியல் துறை நம்புகிறது.