திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:55 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - மீனம்

மீனம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் களத்திராதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மீன ராசி அன்பர்களே, திருமணம் கைகூடும் காலம். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த சில கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். மற்றவர்களிடம் பேசும் போதும் கவனமுடன் வார்த்தைகளை பிரயோகப்படுத்துவது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

குடும்பத்தில் அடிக்கடி பூசல்கள் வந்து போகும். பூர்வீக சொத்துகள் தொடர்பான வழக்குகள் தள்ளிப் போகலாம். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் உபாதைகள் வந்து அடிக்கடி தொல்லைகள் தரலாம். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த விசயங்கள் இப்போது ஓரளவிற்கு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

தொழிலில் உன்னத நிலைக்கு உயருவீர்கள். அவ்வப்போது பிரச்சினைகள் தொழிலில் ஏற்பட்டாலும் அதை திறம்படச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தருவதால் உங்களுக்கு தொழிலைப் பற்றிய கவலை வேண்டாம்.

உத்யோகஸ்தர்கள் தங்களது வேலைகளில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளை நீங்களே உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள்.

பெண்களுக்கு யோகமான காலகட்டம். விரும்பிய பொருட்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரும்பிய மணவாளன் கிடைப்பார்.

மாணவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் தலை தூக்கலாம். கவனம்.

கலைஞர்கள் சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறலாம்.

அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் உங்களுக்கு வேண்டாத சிலரால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு.  எல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்கள் இடத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள்.

ரேவதி:

இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். புதிய வீடு, மனை வாங்குவதில் தடைகள் ஏற்படலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய்

பரிகாரம்; நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.