செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:44 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - கும்பம்

கும்பம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
 
கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் அஷ்டமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கும்ப ராசி அன்பர்களே, வயதானவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனை பெற்று நடந்து கொள்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை படி நடந்து கொண்டால் சில சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு பலப்படும். உங்களுக்குள் இருந்த மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். பிள்ளைகளுக்கு கல்விக்குத் தேவையானதை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். மனதில் சிறு குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படலாம். அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தொழில் - வியாபாரத்தில் சிறிது கவனமுடன் செயல்படுவது நல்லது. வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை. போதிய இருப்பு உள்ளதா என்பதை நீங்களே நேரடியாக பார்த்து விட்டு வாக்கு கொடுப்பது நல்லது. புதிய ஆட்களின் பேச்சைக் கேட்கும் போதும் கவனம் தேவை.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் மேற்பார்வையிலேயே அனைத்து வேலைகளையும் செய்து வாருங்கள். சில ஏற்றத் தாழ்வுகள் வேலையில் வந்து கொண்டு தான் இருக்கும். அதைப்பற்றி கவலையில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.

பெண்கள் யாரிடமும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வேலைகளை நீங்களே செய்து வாருங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்கல்வி பயில விரும்புவோர் படிப்பை தொடரலாம்.

கலைஞர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.  வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அனைத்தும் கிட்டும். நற்காரியங்கள் அனைத்துக்கும் அனுபவ சாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை  மூத்த அரசியல் வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் குடும்பப் பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். கலைஞர்கள் கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும்.

சதயம்:

இந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இப்பொழுது நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

இந்த மாதம்  அரசியல்வாதிகள் மூத்த அறிஞர்களுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத இடங்களில் வாக்கை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – வெள்ளி

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடவும்.