திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:37 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)
 
கிரகநிலை:
 
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் லாபாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இதுவரை நஷ்டமாக இருந்துவந்த அனைத்தும் லாபமாக மாறும். பண விஷயம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் மனம் மகிழும்படியான சூழலே காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும். நீங்கள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நல்லபடியாக நடந்து முடியும். அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் யதார்த்தமாய் பேசும் வார்த்தைகள் கூட சிலருக்கு மனதை காயப்படுத்தும்படி அமையும். எத்தருணத்திலும் யாருக்காகவும் பரிந்து பேச வேண்டாம். வீடு, மனை, வாகனம் போன்றவை நல்லபடியாக அமையும். உற்றார் - உறவினர் வருகை மனதிற்கு சந்தோசத்தை அளிக்கும். ஆரோக்கியம் நல்லபடியாக முன்னேற்றம் அடையும்.

தொழில் ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு அனுகூலமான செய்திகள் வரக் கூடும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடும் போது சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முக்கிய முடிவுகளை பங்குதாரர்களை கலந்து ஆலோசித்து செய்யுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். சக ஊழியர் ஒருவரின் தேவைற்ற தலையீடு தங்களுக்கு மன வருத்தத்தை தரும். கடுமையாக பாடுபட்டு உழைத்தாலும் நற்பெயர் உங்களுக்கு கிடைப்பது சந்தேகமே!

பெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.  அதனை தவிர்க்க முயன்ற முயற்சிகளை எடுங்கள். முக்கிய விஷயங்களில் ஒரு முறைக்கு இருமுறை கவனமுடன் செயல்படுவது நல்லது.

மாணவர்கள் தொழில் சம்பந்தமான கல்வியில் சிறந்து விளங்குவார்கள். செய்முறைப் பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய   திறமைகள் முழுமையாக வெளிப்படும். மேலிடத்தில் ஆதரவு பெருகும்.

 கலைத்துறையினருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். சக   கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும், அந்தஸ்தும் உருவாகும்.

கேட்டை:

இந்த மாதம் வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம். தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடிக்க எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடும்.

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வெள்ளி

பரிகாரம்: செவ்வாய்கிழமைகளில்  முருகனுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.