திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:42 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - மகரம்

மகரம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் (வ), கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பாக்கியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மகர ராசி அன்பர்களே, நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியமும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்தவர்கள் உங்களை வந்து சேருவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் திரும். பிரச்சனை கொடுத்தவர்கள் தானாக விலகி உங்களுக்கு வர வேண்டியதை கொடுக்கும் சூழல் உருவாகும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களுடன் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கோவில் சார்ந்த பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் மாறி நிம்மதி இருக்கும்.

தொழில் - வியாபாரம் நினைத்ததை விட சிறப்பாக இருக்கும். லாபமும் இரட்டிப்பாகவே கிடைக்கும். பெண்களால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளை உங்கள் குடும்ப பெண்களைக் கொண்டு தொடங்குவது சிறப்பாக இருக்கு.
உத்யோகஸ்தர்களுக்கு சில இடர்பாடுகள் இருந்தாலும் அவை உங்கள் சாமர்த்தியத்தால் அகலும். எனவே கவலை இல்லாமல் துணிவுடன் செயல்படலாம்.

பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். அவற்றை உரிய முறையில் பயன்படுத்தினால் உங்கள் முன்னேற்றதிற்கு உதவும்.

மாணவர்களுக்கு இதுவரை இருந்த சோம்பல், உடல் உபாதைகள் போன்றவை மாறி சுறு சுறுப்பாக காணப்படுவீர்கள். இதனால் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.

 கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த   ஏற்றங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில்  சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆளாக ஒருவரை நீங்கள் தேர்வு செய்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள்.  தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

திருவோணம்:

இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன்

பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்யம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம்.