பஞ்சகுரோச ஸ்தலங்கள் தமிழகத்தில் எங்கே இருக்கின்றன தெரியுமா?
சிவபெருமானின் தலங்களில், காசிக்கு இணையான புனிதமான தலங்களாக பஞ்ச குரோச தலங்கள் அழைக்கப்படுகின்றன. “குரோசம்” என்பதற்கு காசி தலத்துடன் நிகரான இடம் என்று பொருள் கொள்ளலாம். காசிக்கு செல்ல இயலாத பக்தர்களுக்காக உருவாக்கப்பட்ட தலங்களே இந்த பஞ்ச குரோச தலங்கள் எனக் கூறப்படுகிறது.
தேவர்களுக்காக தோன்றிய அமுதக் குடத்தை மானுடர்களுக்கும் பயன்படச் செய்ய, இறைவன் அம்பை அடித்து உடைத்தார். அந்த அமுதம், ஐந்து இடங்களில் பரவி, ஐந்து தலங்களை உருவாக்கியது. ஆகையால், அவை பஞ்ச குரோச ஸ்தலங்கள் என அழைக்கப்பட்டன.
ஒரு குரோசம் என்பது, ஒரு மனிதன் இரண்டரை நாழிகைகளில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். காசியில் இருந்து தொலைவிலும், கும்பகோணத்திலும் பஞ்ச குரோச தலங்கள் உள்ளன. அதேபோல, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், காசிக்கு இணையான தலங்கள் அமைந்துள்ளன. இத்தலங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து 25 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளன.
பஞ்ச குரோச ஸ்தலங்களின் பட்டியல்
1. பஞ்ச குரோச ஸ்தலங்கள்:1. சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் திருக்கோவில்.
2. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ வன்னியப்பர் திருக்கோவில்.
3. கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ வில்வவனநாதர் திருக்கோவில்.
4. திருப்புடைமருதூர் ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ நாறும்பூநாதர் திருக்கோவில்.
5. பாபநாசம் ஸ்ரீ உலகாம்பிகை உடனுறை ஸ்ரீ பாபநாசநாதர் திருக்கோவில்.",
Edited by Mahendran