திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் தரிசன டிக்கெட் வரும் 24ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், இந்த பத்து நாட்களுக்கான டிக்கெட் ஆன்லைனில் டிசம்பர் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் 24ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும், நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு கேட்டுகள் இரண்டு நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் எட்டு டிக்கெட் மையங்கள் அமைக்கப்பட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran