1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2021 கண்ணோட்டம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (19:51 IST)

2021 கண்ணோட்டம் - டெல்டா முதல் ஒமிக்ரான் மாறுதல் வரை...!!

2021 ஆம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டில் உலக அளவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் டாப் 10 நிகழ்வுகளை வழங்குகிறோம்..

 
கொரோனா வைரஸ் தொற்று:
சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது பின்னர் 2020 ஆம் ஆண்டு முதல் ஆட்டி படைத்து வரும்  நிலையில் இதன் டெல்டா மாறுபாடு உலகையே அச்சுறுத்துகிறது. டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்பை மரணங்களையும்  ஏற்படுத்தியது. பல நாடுகளில் உடல்களை புதைக்க இடம் இல்லாத சூழ்நிலையையும் இந்த மாறுபட்ட கொரோனா வைரஸ் உருவாக்கி  தற்போது குறைந்துள்ளது.  
 
கிசான் அந்தோலன்:
மோடி தலைமையிலான மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அறிமுகப்பட்டுத்தி அதனை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது.  ஆனால், இதனை எதிர்த்து துவக்கம் முதலே டெல்லியில் பல மாநில விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வந்ததனர். இது ஒரு கட்டத்தில்  வன்முறையாகவும் மாறியது. பின்னர் விவசாயிகளின் விடாத போராட்டத்தால் வேளாண் சட்டங்கள் திரும்பி பெறப்பட்டது. விவசாயிகள்  தொடர்ந்த போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 
 
இந்தியாவில் 138 கோடி பேருக்கு தடுப்பூசி
ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டு  வரும் நிலையில் சமீபத்தில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்துதல்  கட்டாயமாக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் 138 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த எண்ணிக்கை மக்கள் மத்தியில் உள்ள  விழிப்புணர்வு காரணமாக மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. 
 
துர்க்கை கோவில் மீது தாக்குதல்
வங்கதேசத்தில் இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். வன்முறையில்  ஈடுபட்டவர்களில் இதுவரை 100 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலே மத  ரீதியான கலவரம் வெடிக்க காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே நவராத்திரி விழாவை சீர்குலைக்க  வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வங்கதேசத்தில் இருக்கும் இந்து மதத் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
 
அமெரிக்காவிற்கு புது அதிபர்
அமெரிக்காவின் தேர்தல்கள் முடிந்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதிய  அதிபராகினார். ஜனநாயக கட்சியின் இதற்கு முந்தைய அதிபரான பராக் ஒபாமா 2008 - 2016 அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, ஜோ  பிடன் துணை அதிபராக இருந்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ள முதல் பெண், முதல் கருப்பின வம்சாவளியை  சேர்ந்தவர், முதல் இந்திய வம்சாவளி கொண்டவர்.
 
வெள்ளை மாளிகையின் முன் போராட்டம்
அமெரிக்காவின் தேர்தல்கள் முடிந்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதிய  அதிபராகினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்ட பிறகு வெள்ளை மாளிகையின் முன் பெரும் போராட்டம்  நடந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
தலிபான்கள் ஆட்சி
2001 செப்டம்பர் 11 அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த போதே தலிபான்கள்  ஆட்சிக்கு பிரச்சினை வந்துவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம்  கொடுத்திருந்த தலிபான்கள் மீது அமெரிக்க ராணுவம் போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அகற்றியது. ஜனநாயக ரீதியிலான அதிபர்  தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டமும் நிறுவப்பட்டன. பின்னர் அமெரிக்கா அப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  பின்னர் பைடன் ஆட்சிக்கு வந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் பின்வாங்கியதால் அங்கு தலிபான்கள் ஆட்சி நடத்த  துவங்கியுள்ளனர். 
 
தென்கொரியாவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான்
உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக  பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆய்வாளர்கள் பலர் ஒமிக்ரான்  வேகமாக பரவக்கூடியது என்றாலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறி வருகின்றனர். தென்கொரியாவில் கண்டறியப்பட்ட  கொரோனா டெல்டா மாறுபாடு வைரஸான ஓமிக்ரானால் தற்போது பல நாடுகள் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. இதனால் சர்வதேச விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம்
மனித வரலாற்றில் முதன்முறையாக நாசாவின் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தைத் தொட்டது. நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப்  (Parker Solar Probe) சூரியனின் மேல் வளிமண்டலம், அங்குள்ள துகள்கள் மற்றும் காந்தப்புலங்கள் வழியாக சென்றது. பார்க்கர்  சோலார் ப்ரோப், சூரிய அறிவியலுக்கான ஒரு மைல்கல் எனலாம். சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் ப்ரோப்  விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அமைப்பு விண்வெளியில் ஏவியது. 
 
ஃபேஸ்புக் டூ மெட்டா
கடந்த சில வாரங்களாக ஃபேஸ்புக்கின் நிறுவனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ... இந்நிலையில்  பேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ஃபேஸ்புக்கின் பெயர் Meta என  மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். சர்ச்சைக்குப் பிறகு ஃபேஸ்புக் அதன் பெயரை மாற்றி இப்போது மெட்டா என்று பெயரிட்டு செயல்பட்டு  வருகிறது.