1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (16:25 IST)

விராட் கோலியின் தனித்துவமே இதுதான்… ஹர்பஜன் சிங் புகழ்ச்சி!

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை கோலி தனித்துவமான கேப்டன் என ஹர்பஜன் சிங் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு கோலி தலைமை தாங்கியதில் இருந்து மிகச்சிறப்பாக அணியை கொண்டு சென்று வருகிறார். அவரின் தலைமையில் தொடர்ந்து இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக அவரின் தலைமையில் வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வென்று காட்டியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கோலியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் குறித்து ‘ கோலியின் கேப்டன்சியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் டெஸ்ட் அணி எப்படி தொடரை வெல்வது என்று யோசிக்கும். அவர் இல்லாத அணி என்றால் தொடரை இழந்துவிடக் கூடாது என யோசிக்கும்’ எனக் கூறியுள்ளார்.