ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (20:29 IST)

பிரபல ஐசிஐசிஐ வங்கியின் உரிமம் ரத்து...

இலங்கையில் செயல்பட்டுவந்த ஐசிஐசிஐ வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலும் தனது கிளைகளை விரிவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி இலங்கையில்  தனது செயல்பாட்டை நிறுவத்துவதாக முடிவு செய்து , அந்நாட்டின் மத்திய வங்கி நாணய வாரியத்திடம் கோரிக்கை விடுத்தது.

இதனையேற்றுள்ள மத்திய வங்கி நாணய வாரியம், ஐசிஐசிஐ வங்கியின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்க்கியுள்ளது.

இதையடுத்து இலங்கையில் செயல்பட்டுவந்த ஐசிஐசிஐ வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 23 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி நாணய வாரியம் தெரிவித்துள்ளது.