ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2020 (08:23 IST)

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்ததால் தமிழக மீனவர்கள் நிம்மதியில் இருந்தனர். ஆனால் அந்த நிம்மதியை குலைக்கும் வகையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இலங்கை கடற்படை நடத்திய இந்த கொடூரமான தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரைதிரும்பினர்
 
அதுமட்டுமின்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரைதிரும்பியதாகவும், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.