1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:02 IST)

ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

ரஷ்ய ராணுவ வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
5 நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர், 191 பீரங்கிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
 
முன்னதாக உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மை தான் என ரஷ்யாவும் ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
அதில், போரை நிறுத்திக்கொண்டு உங்கள் உயிரை பாதுகாத்துக்கொண்டு உடனடியாக வெளியேறுங்கள் என காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.