என்னை நம்பியவர்களை விட்டு வரமாட்டேன்: உக்ரைனில் உள்ள இந்திய மாணவி!
என்னை நம்பியவர்களை விட்டு வரமாட்டேன் என உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப மறுத்த இந்திய மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நேஹா என்ற மாணவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றிருந்தார். இந்த நிலையில் திடீரென போர் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரை இந்தியாவுக்கு திரும்ப அவருடைய பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் தன்னுடைய வீட்டின் உரிமையாளர் தனது மனைவி குழந்தைகளை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு போருக்குச் சென்று விட்டதாகவும் அவர் திரும்பி வரும்வரை தாய்நாடு திரும்ப முடியாது என்றும் அவர் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.