திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:52 IST)

தீம்தலக்கடி தில்லாலே! கொரோனாவை மறந்து குத்தாட்டம் போடும் வூகான்!

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய வூகான் மாகாணம் தற்போது கொண்டாட்டத்தின் குடிலாகி உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலக நாடுகள் உஷார் ஆவதற்குள் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் இன்று மொத்த உலகையும் முடக்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்த வூகான் மாகாணம் தற்போது பழைய நிலையை அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் முகமூடி அணிந்தும், சானிட்டைசர் வைத்துக் கொண்டும் வாழ்ந்து வரும் நிலையில், வூகான் மக்களோ கொரோனாவையே முற்றிலுமாக மறந்து கொண்டாட்ட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். வூகானில் உள்ள கேளிக்கை அரங்குகள் திறக்கப்பட்டதால் அங்கு குவிந்த மக்கள் நீர் விளையாட்டு போன்றவற்றில் கூட்டம் கூட்டமாக இணைந்து கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் புதிய கொரோனா பாதிப்புகளும் உருவாகி வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வரும் நிலையில் வூகான் மக்களின் கொண்டாட்டம் உலக நாடுகள் இடையே மெல்லியதான பீதியை ஏற்படுத்தியுள்ளது.