பாகிஸ்தானுக்கு பக்க வாத்தியமாய் சீனா! – இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்கள் குவிப்பு!
காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்கள் அளித்து உதவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா – இந்தியா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த சீனா தளவாடங்கள் அளித்து உதவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதிகளில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி விமானங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவிலிருந்து காய் ஹாங் 4 யுஏவியை அதிகளவில் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான குழு ஒன்று இதற்காக சீனாவிற்கு சென்று கொள்முதல் குறித்த ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னரே பாகிஸ்தான் ராணுவம் பயங்கர வாத அமைப்புகளுக்கு பயிற்சிகள் அளித்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.