வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (08:25 IST)

இந்தியாவை காட்டி ஓட்டு வாங்கும் அமெரிக்கா! – சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரத்தில் இந்திய ஆதரவு குறித்த உறுதிமொழிகள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிருகின்றனர். ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்தியா குறித்த போட்டி எழுந்துள்ளது.

முன்னதாக ஒரு கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் “கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி என்றாலும், பெரும்பான்மை இந்தியர்களின் ஆதரவு எனக்குதான் உள்ளது” என பேசியிருந்தார். ட்ரம்ப்பின் எச்1பி விசா விவகாரத்தால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களை ஈர்க்க ட்ரம்ப் இந்திய ஆதரவு வார்த்தைகளை பேசி வருவதாகவும் சிலர் கூறினர்.

இந்நிலையில் இந்திய சுதந்திர தின விழாவிற்கு வாழ்த்து கூறும் வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய கூட்டத்தில் ஜோ ஃபிடன் பேசியுள்ளார். அப்போது அவர் ”கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் அணு ஆயுத ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதற்கு முன்னணியில் இருந்து பணியாற்றியவன் நான். இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த நட்பு நாடுகளாக மாறினால் இந்த உலகமே அமைதியானதாக மாறும் என நம்புகிறேன். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவிற்கு எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட சகலத்திலும் உதவுவேன்” என பேசியுள்ளார்.

அதிபர் வேட்பாளர்கள் இருவரும் மாறி மாறி இந்தியா ஆதரவை பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருவது உலக அரங்கில் மற்றும் அமெரிக்காவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை பிரதிபலித்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர்.