உக்ரைன் மிதான ரஷ்யாவின் தாக்குதல்: உலக வங்கி எடுத்த அதிரடி முடிவு!
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக தாக்கி வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களையும் கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்பட பல அமைப்புகளும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் தடைகளும் நிபந்தனைகளை விதித்து வருகின்றன
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா மற்றும் பெலாராஸ் ஆகிய இரு நாடுகளுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
எரிசக்தி கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக உலக வங்கியுடன் 120 கோடி ரூபாய் பெலாரஸ் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது அந்த திட்டங்களை ரத்து செய்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது
அதேபோல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த 370 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை ரத்து செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது.