புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (10:54 IST)

சீனாவில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு.. 1400 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பு..!

AI என்ற செயற்கை நுண்ணறிவு தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் இந்த AI தொழில்நுட்பம் நுழைந்துவிட்டதை அடுத்து மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் முன்னணி நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதால் மிகப் பெரிய அளவில் செலவு குறைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்றது.
 
மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 32 தொழில்முறை திட்டங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. 400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த மாநாட்டில் காட்சிப்படுத்திருந்தனர். 
 
நோபல் பரிசு வென்றவர்கள் உட்பட 1400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். குறிப்பாக கால்பந்து விளையாடும் ரோபோ இந்த மாநாட்டில் அனைவரின் கவனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva