வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (16:48 IST)

''வாடகை அப்பா'' சேவை அறிமுகம்- ஆர்வம் காட்டும் இளம்பெண்கள்

china
சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம்  ஒன்று  வாடகை அப்பா சேவையை அறிமுகம் செய்துள்ளது.

வடக்கு சீனாவின் லியோனிங் என்ற மாகாணத்தில் ஒரு குளியல் இல்லம்  செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு வருகின்றனர்.

இங்கு வாடகை அப்பா என்ற புதிய சேவையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது,. அதன் மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, அவர்களை பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வது, குழந்தைகளுக்கு உடைகள்  மாற்றுவது  போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வர் என்றும் தாய் குளிக்கும் வரை வாடகை அப்பாக்கள் குழந்தைகளை நன்றாகக பார்த்துக் கொள்வர் எனக் கூறப்படுகிறது.

பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில் குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்த சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வரும்போது, அவர்களை வாடகை அப்பாவிடம் ஒப்படைத்தால்  நிம்மதியாக அவர்கள் குளித்து மகிழும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதவிர, இங்கு, உணவுகள், மசாஜ், பொழுதுபோக்கு அம்சங்கள், ஆண், பெண் மற்றும் சிறுவர்களுக்கு எனத் தனிதனி அறைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.