ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 செப்டம்பர் 2018 (07:48 IST)

திருமணத்திற்காக பெண்ணை கடத்த தயார்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக பிரமுகர்கள் பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களின் கேலி, கிண்டல் மற்றும் கண்டனத்திற்கு ஆளாகி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் திருமணத்திற்காக பெண்களை கடத்தி வரவும் தயார் என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையின் காட்கோபர் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் காதம். இவர் நேற்று அந்த பகுதியில் நடந்த உறியடி திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட ஏராளமான இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'இளைஞர்களுக்காக நான் எதையும் செய்ய தயார். இளைஞர்கள் தங்களின் எந்த வித தேவைக்கும் என்னை அணுகலாம். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பினால், அந்த பெண் உங்களை விரும்பாவிட்டாலும் என்னிடம் வந்தால் அந்த பெண்ணை கடத்தி உங்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்' என்று கூறினார்.

ஒரு பெண்ணை அவருடைய விருப்பமில்லாவிட்டாலும் சட்டவிரோதமாக கடத்தி திருமணம் செய்து வைப்பேன் என ஒரு எம்.எல்.ஏவே கூறியுள்ளதை பலர் கண்டித்துள்ளனர். இந்த பேச்சுக்கு மும்பையில் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.