1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (18:13 IST)

டோக்கன் போட்டு போஸ்டர், பேனர், கட் அவுட் வைங்க... ரஜினி போடும் கட்டுப்பாடு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிரங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர் எப்போது அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. 
 
இன்னும் அரசியல் கட்சியை துவங்காமல் இருக்கு ரஜினி விரைவில் அதனை துவங்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர். ஆனால், அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
சமீபத்தில் கூட தனது மக்கள் மன்ற் நிர்வாகிகளுக்கு சில விதிமுறைகள் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அதோடு சேர்த்து தற்போது போஸ்டர், பேனர், கட் அவுட் ஆகியவற்றிற்கு கடுபாடுகளை விதித்துள்ளார். 
 
அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்துவதற்கு முன்னர் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகைகளை தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே அதனை பொது இடங்களில் வைக்க வேண்டும் என நடிகர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.