வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (19:42 IST)

இனி துப்பட்டாவுடன்தான் செல்ல வேண்டும்: இம்ரான் கான் புது உத்தரவு

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றார். தேர்தலின் போது நவீன பாகிஸ்தானை உருவாக்குவேன். சர்வாதிகாரத்தை ஒழிப்பேன் என பிரச்சாரம் செய்தார். 
 
ஆனால், இப்போது அவர் செய்யும் வேலைகள் அனைத்தும் அவர் கூறியதற்கு நேர்மாராக உள்ளது. தற்போது, பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் தலைமை செயலகத்தில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 15 ஆன்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
 
எனவே, இங்கு வந்து அவர் இவ்வாறு உத்தவுகளை பிறப்பித்து இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், இதுதான் இம் ரான்கானின் நவீன பாகிஸ்தானா? சர்வாதிகாரம் ஒழிப்பா? என கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.